வயதான தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்.. பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு..!

வயதான தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்.. பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் மீது வழக்கு..!

Update: 2022-03-29 11:47 GMT

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன் (65). இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனிடையே கணேஷ்குமார், கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


கணேஷ்குமார் உயிரிழந்த நிலையில், அவருக்கு கடனாக கொடுத்த பணத்தை அவருடைய பெற்றோரிடம் பிரகாஷ் கேட்டு வந்துள்ளார். ஆனால், பணம் இல்லாத காரணத்தினால், குமரேசன் அவகாசம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு பாஜக பிரமுகர் பிரகாஷ் உட்பட 3 பேர் குமரேசன் நடத்தி வரும் மளிகைக் கடைக்குள் புகுந்து, குமரேசன் மற்றும் அவரது மனைவியிடம், “கணேஷ்குமாருக்கு கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம்” என்று மிரட்டி, அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பாஜக பிரமுகர் பிரகாஷ் உட்பட 3 பேர், குமரேசன் மற்றும் அவருடைய மனைவியை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News