சட்டசபை விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.. ஆளுநர் விளக்கம்

சட்டசபை விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்.. ஆளுநர் விளக்கம்

Update: 2022-02-13 16:39 GMT

மேற்கு வங்காள அரசுக்கும் ,அம்மாநில ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இது பல்வேறு விவகாரங்களில் நேரடியாகவே காணமுடிந்தது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக  நேற்று அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கார் அறிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பேரும் பேசுபொருளாக இவ்விவகாரம் மாறியது. 
 
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று தனது  டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க  ஸ்டாலின், மேற்கு வங்காள  ஆளுநரின் செயல் ,விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு  எதிரானது .ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது .அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த மாநில தலைமையில் இருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும், என்று பதிவிட்டு இருந்தார். 

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில், அவரை டுவிட்டரில் டேக் செய்து மேற்கு வங்காள  கவர்னர் ஜெகதீப் தன்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது. தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். 

கடந்த நவம்பர் 17ஆம் தேதி நிறைவடைந்த பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைக்க இம்மாதம் 11ஆம் தேதி மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்ததாகவும் அதன்படி 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News