சட்டமன்ற உறுப்பினரான தூய்மை பணியாளர்… அண்ணாமலை ட்வீட்!!

சட்டமன்ற உறுப்பினரான தூய்மை பணியாளர்… அண்ணாமலை ட்வீட்!!

Update: 2022-03-16 06:15 GMT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்புரவு பணியாளர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினரான வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர் கணேஷ் சந்திர சவுகான், பிரதமர் மோடி அவர்கள் தூய்மை பணியாளருக்கு பெரிய மதிப்பை அளித்துள்ளார், தூய்மை பணியாளர்கள் குறைந்தவர்கள் இல்லை என்று பேசியுள்ளார்.

கொரோனா காலத்தில் வண்டியில் பூரி , காய்கறி வைத்து ரிட்ஷா காரர்களை தேடி சென்றேன். ரிட்ஷா ஓட்டுபவர்கள் கொரோனா காலத்தில் உணவுக்கு மிகுந்த கஷ்ட பட்டனர். பீகாரில் இருந்து வந்த பலர் சந்த் கபீர் பகுதியில் இருக்கின்றனர்.

எனக்கு சீட் வழங்கப்பட்டதுடன் ஆனந்த கண்ணீருடன் பலர் என்னுடன் பேசினர். இப்படிப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்றனர். நான் வென்ற போது என்னை நேரில் சந்தித்தனர். கட்டி அணைத்து கொண்டனர். ரிக்சா ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

3 மாதங்கள் யாரும் எங்களை கண்டுகொள்ளாத போது நீங்க உணவளித்தீர்கள் என கூறினார்கள். பாரதிய ஜானதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தால் மட்டுமே இது நடந்துள்ளது என கூறியுள்ளார் .

இது குறித்த பதிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் .பி.யில் சகோதரர் கணேஷ் சந்திர சவுகான் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு எம்.எல்..வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மையான சமூக நீதி என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக இதை செயலில் காட்டக்கூடிய ஒரே கட்சி, திமுக போன்று உதட்டளவில் மட்டும் அல்ல என பதிவிட்டுள்ளார்.


newstm.in

Similar News