மது அருந்துவதற்காக ஒரு மணி நேரம் ரயிலை நிறுத்திய உதவி ஓட்டுநர்..!

மது அருந்துவதற்காக ஒரு மணி நேரம் ரயிலை நிறுத்திய உதவி ஓட்டுநர்..!

Update: 2022-05-05 20:20 GMT

பிகார் மாநிலம், ஹசம்பூர் ரயில்வே நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியும் பயணிகள் ரயில் ஒன்று புறப்படாமல் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் உதவி ஓட்டுநர் கரண்வீர் யாதவ், ரயிலில் இருந்து கீழே இறங்கி மது அருந்தச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல் துறையினர், ஓட்டுநரைத் தொடர்புகொள்ள முயன்றபோது ரயில் ஓட்டுநர் குடித்து விட்டு வந்துள்ளார். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக சமஸ்திபூரிலிருந்து ரயில் இயக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய சமஸ்திபூர் ரயிவே மேலாளர் அலோக் அகர்வால், ரயில்வே ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News