குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 67.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.