அடேங்கப்பா, ஒரு ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை இத்தனை கோடியா..?
அடேங்கப்பா, ஒரு ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை இத்தனை கோடியா..?
கடந்த 2019 - 2020-ம் நிதி ஆண்டில் தேசிய கட்சியான பாஜக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து 720 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், 2019 - 2020-ம் நிதியாண்டில் 2,025 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக 720. 47 கோடி ரூபாயும், காங்கிரஸ் 154 நிறுவனங்களிடமிருந்து 133.04 கோடி ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் 36 நிறுவனங்களிடமிருந்து 57.86 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.