சத்தீஸ்கரில் நடந்த கொடூரம்..!! கணவரை அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற மனைவி!!

சத்தீஸ்கரில் நடந்த கொடூரம்..!! கணவரை அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்ற மனைவி!!

Update: 2022-06-17 04:15 GMT

சத்தீஸ்கரின் கொண்டகன் மாவட்டம் உரிபேண்டா பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தை சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் பர்சகான் பகுதியில் உள்ள பட்காய் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.

இதனிடையே கடந்த 11-ம் தேதி அன்று தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தனிமையில் இருப்பதை கண்டு அந்த நபரின் மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, தனது உறவினர்களை அழைத்த அந்த பெண் தனது கணவனையும், அவருடன் தனிமையில் இருந்த பெண்ணையும் கையும் களவுமாக பிடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

அதோடு அவர்களை அரை நிர்வாணமாக்கி கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளார். இதனை அக்கிராமத்தினர் வேடிக்கை பார்த்ததோடு சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

அது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து கொண்டகன் மாவட்ட எஸ்.பி., திவ்யாங் படேல் காவல்நிலைய குழுவை அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். அதன் பேரில் சம்பவம் நடந்ததை உறுதிசெய்த போலிசார் கணவனையும், அவருடன் தனிமையில் இருந்த பெண்ணையும் அரைநிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக இழுந்து வந்த அந்த நபரின் மனைவி மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து பேசியுள்ள அப்பழங்குடியின கிராம தலைவர் மங்குராம் மன்ஜி, நடந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும், அது தொடர்பாக கிராம அளவில் விசாரிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் செய்தது வெட்கக்கேடான சம்பவம் என கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News