உ.பி.யில் கொடூரம்.. புகாரளிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் அதிகாரி !

உ.பி.யில் கொடூரம்.. புகாரளிக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் அதிகாரி !

Update: 2022-05-05 07:15 GMT

கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி புகாரளிக்கச் சென்ற சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் பாலியில் வசிக்கும் நான்கு சிறுவர்கள், 13 வயது சிறுமியை ஏமாற்றி ஏப்ரல் 22 அன்று போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அந்தச் சிறுமியை மூன்று நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.  

பெரும் கொடூரத்தை அனுபவித்த சிறுமி அங்கிருந்து தப்பித்து, இதுகுறித்து புகார் அளிப்பதற்காக அவளது தாய், சிறுமியுடன் பாலி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவல் நிலைய பொறுப்பாளர் சிறுமியை அவரது அத்தையுடன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு (Child Line Centre) அனுப்பி வைத்தார். 

இரண்டு நாட்களுக்குப் பிறகு, காவல் நிலையப் பொறுப்பாளர் சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக சிறுமியை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவர் சிறுமியை ஒரு அறைக்கு தனியே அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரியவர அவர், போலீஸ் சூப்பிரண்டிடம் நேரடியாக முறையிட்ட பிறகுதான் இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையப் பொறுப்பாளர், சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கும்பலை தேடி வந்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்த  போலீஸ் அதிகாரியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அத்துடன் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அந்த போலீஸ் அதிகாரியையும் தேடி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News