நாகை அருகே கொடூரம்.. மனைவி, மகள்கள் கொலை.. கணவன் தற்கொலை..!

நாகை அருகே கொடூரம்.. மனைவி, மகள்கள் கொலை.. கணவன் தற்கொலை..!

Update: 2022-02-18 11:40 GMT

மகள் காதல் திருமணம் செய்ததால் மன உளைச்சலில் இருந்த தந்தை, தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு, தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி புவனேஸ்வரி (45), மகள்கள் வினோதினி (18), அக்சயா (15). கடந்த 3  மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மூத்த மகள் காதல் திருமணம் செய்துள்ளார். 

இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களின் தலையில் கொன்று தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News