நீதிபதியை கொலை செய்ய முயற்சி.. காரணம் கேட்டு அதிர்ச்சியான போலீசார்..!!
நீதிபதியை கொலை செய்ய முயற்சி.. காரணம் கேட்டு அதிர்ச்சியான போலீசார்..!!
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் நான்கில் நீதிபதியாக பணி புரிந்து வருபவர் பொன் பாண்டியன். இவருடைய அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் பொன் பாண்டியன் இருந்தபோது அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர் தனது கையில் வைத்திருந்த கத்தியில் நீதிபதியை தாக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் கூச்சலிடவே அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியரான பிரகாஷை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி குமரகுரு சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தனது இடமாறுதலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன் தான் காரணம் என எண்ணத்தில் இந்த செயலில் பிரகாஷ் ஈடுபட்டதாக் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.