சென்னை மக்களே கவனம்.. நாளை முதல் இங்கே போக்குவரத்து மாற்றம்..!

சென்னை மக்களே கவனம்.. நாளை முதல் இங்கே போக்குவரத்து மாற்றம்..!

Update: 2022-07-08 11:08 GMT

சென்னை, வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் நாளை (ஜூலை 9) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 100 அடி சாலையில், வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில், 09.07.2022 முதல் பரிசார்த்த முறையில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

1- 100 அடி சாலை 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து 4வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே. நகர் செல்லும் வாகனங்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல செல்லலாம்.

2- அசோக் பில்லர் வழியாக தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம்.

3- கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4வது நிழற்சாலை வழியாகச் சென்று, கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையை அடைந்து அசோக் பில்லர் நோக்கிச் செல்லலாம்.

4- வடபழனியில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பில், இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம்.

5- பி.டி. ராஜன் சாலை X பி.வி. இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து 2வது நிழற்சாலை X 100 அடி சாலை வரை தற்பொழுதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தப்படும். மேற்படி, பி.டி. ராஜன் சாலை X இராஜமன்னார் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை X 100 அடி சாலையை அடைந்து நேராக 2வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம்.

6- வடபழனி மார்க்கத்திலிருந்து கே.கே. நகர் செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலை சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலையை அடைந்து 100 அடி சாலையில் வலது புறம் திரும்பி கே.கே. நகரினை பி.டி. ராஜன் சாலை வழியாக அடையலாம்.

7- கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்க்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக 3வது மற்றும் 6வது நிழற்சாலை வையாக 100 அடி சாலை வலது புறம் திரும்பி செல்ல வேண்டிய வழித்தடத்தில் செல்லலாம்.

பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News