மக்களே கவனம்.. மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம்.. 25 நாள் வாட்டப் போகுது..!

மக்களே கவனம்.. மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம்.. 25 நாள் வாட்டப் போகுது..!

Update: 2022-04-20 05:00 GMT

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டம் உள்பட  சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தத் தொடங்கியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

ஈரோட்டில் 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டி விட்டது.

இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் வெயில் காலம்  மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காலக் கட்டத்தின்போது அனல் காற்று வீசும் என்பதால் பகலில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், குளிர்ந்த நீராகாரங்கள் பருகி வெப்பத்தை தணித்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News