மாணவர்கள் கவனத்திற்கு... இன்று முதல் மறுகூட்டல் விண்ணப்பம்!!
மாணவர்கள் கவனத்திற்கு... இன்று முதல் மறுகூட்டல் விண்ணப்பம்!!
தமிழகத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியான நிலையில், அவர்கள் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த முறையும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மறுகூட்டலுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி தொடங்கும். 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி, பள்ளிகள் மூலம் வரும் 24ஆம் தேதி காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அல்லது, www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in