பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில், ‘தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு வரும் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும்.
மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை விவரங்கள், கட்டண விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
ஆன்லைன் மற்றும் பதிவு கட்டணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 50 ரூபாய் வசூலிக்க வேண்டும். அதேநேரம், ஆதிதிராவிடர் மாணவ - மாணவியருக்கு கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.