குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு!!
குரூப் 4 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் 1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
குரூப் 2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.
குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் 29ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28ஆம் தேதி.
இதனிடையே, குரூப்-4 தேர்வுக்கு நேற்று மாலை 5 மணி வரை 7.85 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
newstm.in