சார்ஜ் வயரால் கழுத்தை நெரித்து 4 வயது சிறுவன் கொலை.. அத்தை கைது !!

சார்ஜ் வயரால் கழுத்தை நெரித்து 4 வயது சிறுவன் கொலை.. அத்தை கைது !!

Update: 2022-04-11 18:16 GMT

செல்போன் சார்ஜரின் வயரை பயன்படுத்தி சிறுவனின் கழுத்தை நெறித்து கொலை செய்த சிறுவனின் அத்தை கைது செய்யப்பட்டார். 

அரியானா மாநிலம் கர்னால் அடுத்த கமால்பூர் ரோடன் பகுதியில் 4 வயது சிறுவன் ஜாஷ் பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த நிலையில், கடந்த கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விளையாட  சென்ற சிறுவன் அதன்பின்னர் மாயமானார். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும், கிராம மக்களும் சிறுவன் ஜாஷை பல்வேறு இடங்களிலும் தேடினர்.

ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இதனால் சிறுவன் மாயமானது குறித்து சாப்பே-சப்பே போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி  பக்கத்து வீட்டு மேற்கூரையில் ஜாஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.  

போலீசார் சிறுவனின்  உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின்  உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அதன்பேரில், சிறுவன் ஜாஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அவரது அத்தை அஞ்சலியை கைது செய்தனர். இரண்டரை மாத கர்ப்பிணியான அவர், ஜாஷைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். செல்போன் சார்ஜரின் வயரை பயன்படுத்தி ஜாஷை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பின்னர் சிறுவனின் உடலை படுக்கையில் மறைத்து வைத்தார். பின்னர் உறவினர்கள், போலீசார் தேடுவதை அறிந்து வீட்டின் கூரை மீது உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடித்தார். கொலைக்கான காரணத்தை அந்தப் பெண் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

newstm.in

Tags:    

Similar News