சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி நிற்காமல் சென்ற ஆட்டோ!

சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதி நிற்காமல் சென்ற ஆட்டோ!

Update: 2022-04-07 04:30 GMT

சென்னையில், வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (5-ம் தேதி), சென்னை போரூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த ஆட்டோ ஒன்று அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் என்பவரை  இடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றது. இதில் காயமடைந்த பொன்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

இந்நிலையில், காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று காலை திடீரென சென்ற டிஜிபி சைலேந்திர பாபு, அவருக்கு ஆறுதல் கூறியதுடன்,  தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அவரது மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் உறுதி அளித்தார்.

Similar News