போதையில் ஆணுக்கு தாலிகட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. கணவருடன் தான் வாழ்வேன் என இளைஞர் அடம் !!
போதையில் ஆணுக்கு தாலிகட்டிய ஆட்டோ ஓட்டுநர்.. கணவருடன் தான் வாழ்வேன் என இளைஞர் அடம் !!
குடிபோதையில் ஆணுக்கு தாலிகட்டிய ஆட்டோ டிரைவர்; கணவருடன் தான் வாழ்வேன் என அடம் பிடித்த வாலிபர்
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மதுபோதைக்கு அடியான இவர், அவ்வப்போது டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி மதுகுடிக்கும் இடத்தில், இவருக்கு 21வயதான இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இருவரும் மதுபானகடையில் அதிகமாக குடித்துள்ளனர். போதையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசிய இருவரும் ஒரு கட்டத்தில் பாலியல் உறவு குறித்து பேசத்தொடங்கினர். மேலும் ஒருபடி சென்று இருவரும ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர். இதில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதன்படி, இருவரும் குடிபோதையிலிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்று 22 வயது ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து உள்ளார். பின்னர் போதையிலேயே இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதன்பின்னர் இருவரும் சில நாட்கள் சந்திக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு அவர் தாலிகட்டிய 21 வயது இளைஞர் வந்து உள்ளார். அங்கு ஆட்டோ ஓட்டுநரின் பெற்றோரிடம் தங்கள் மகனுக்கும் தனக்கும் நடந்த திருமணம் குறித்து கூறி, இனி நான் தனது கணவருடன் இங்குதான் வாழ்வேன் என சொல்லியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநரின் பெற்றோர் 21 வயது இளைஞருடன் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இதனால் அந்த இளைஞர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில் அந்த 21 வயது இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை. அதனால் இனி தான் தனியாக வாழ ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். போதையில் செய்த விணையாக வந்து முடிந்ததாக ஆட்டோ ஓட்டுநர் தலையில் அடித்துக்கொண்டார்.
newstm.in