அனைத்து வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்த விருதுபெற்ற திமுக வேட்பாளர் !!

அனைத்து வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்த விருதுபெற்ற திமுக வேட்பாளர் !!

Update: 2022-02-22 17:05 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் பெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் 10 ஆவது வார்டில் போட்டியிட்ட திருவெற்றியூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் தனியரசு சுமார் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தோல்வி அடைந்தனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர்.

இதனால் திமுகவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு நிகழ்ந்த திருவொற்றியூர் கட்டிட விபத்தில் இருந்து பொது மக்களை காப்பாற்றிய தனியரசு அவர்கள், முதலமைச்சரிடம் பேரறிஞர் அண்ணா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த பிப்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது. இதனைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

newstm.in

Similar News