ரஜினி பட நடிகைக்கு பிடி வாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
ரஜினி பட நடிகைக்கு பிடி வாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
பாலிவுட்டில் பிரபலமான நடிகை சோனாக்சி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி சினிமாவில் கலக்கி வரும் நடிகை சோனாக்சி சின்ஹா, தமிழில் ‘லிங்கா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நடிகை சோனாக்சி சின்ஹாவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்து இருந்தனர். இதற்காக அவருக்கு 4 தவணைகளாக ரூ.37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல சோனாக்சி சின்ஹா மறுத்துவிட்டார்.
இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே வழங்கிய ரூ.37 லட்சம் ரூபாயை கேட்டனர். ஆனால் நடிகை சோனாக்சி சின்ஹா பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதையடுத்து சோனாக்சி சின்ஹா மீது உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சோனாக்சி சின்ஹா உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்த உத்திரபிரதேச மொரதாபாத் கோர்ட்டு சோனாக்சி சின்ஹாவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in