#BIG BREAKING:- ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க பொதுக்குழுவில் தீர்மானம்..!!
#BIG BREAKING:- ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்க பொதுக்குழுவில் தீர்மானம்..!!
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்திப் பேசி வந்தனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழுவில் எராளமான தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிமுக கொள்கைக்கும், கோட்பாடுக்கும் விரோதமாக செயல்பட்ட பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக திமுக அரசுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறார். காவல்நிலையத்தில் புகார் தந்தது அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது. கட்சியினர் மீது வழக்கு தொடர்ந்து, சுயநலன் சார்ந்து அதிமுக கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.கட்சி விதிகள், கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழுவில் அறிவித்தார்.
மேலும், கட்சியின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்படுகிறார். அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அறிவித்தார்.