#BIG NEWS :- சொந்த வார்டில் தோல்வி அடைந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக 0 ..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

#BIG NEWS :- சொந்த வார்டில் தோல்வி அடைந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக 0 ..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!;

Update: 2022-02-22 14:00 GMT

கடந்த பிப்ரவரி19-ம்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே முன்னணி வகிக்கின்றன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வசிக்கும், சேலம் மாநகராட்சி 23வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை 23வது வார்டு பகுதியில் வசித்து வருகிறார். இதில், நெடுஞ்சாலை நகர் 23-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். 

அதே போல்,  ஓபிஎஸ் தொகுதியில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் நடந்த தேர்தலில் திமுக 11 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறாதது அதிமுகவினர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உட்பட 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

உடுமலை நகராட்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் சொந்த வார்டில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
 

Tags:    

Similar News