#BIG NEWS :- ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் முடக்கம்.!!

#BIG NEWS :- ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் முடக்கம்.!!

Update: 2022-02-25 22:30 GMT

உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து உலக அளவில் இதன் தாக்கம் வெளிப்பட்டுள்ளது. போரை நிறுத்தக் கோரி உலக நாடுகள் பலவும் ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் எனவும் ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை குழுவை அனுப்ப தயார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன.எனினும் இதனால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாக புதின் கூறியிருந்தார். 

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News