#BIG NEWS :- ஆஸ்கர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்..!!

#BIG NEWS :- ஆஸ்கர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்..!!

Update: 2022-04-02 12:01 GMT

லாஸ் ஏஞ்சிலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் பேசிய நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் உருவ தோற்றத்தை கேலி செய்தார். தொடர்ந்து அவர் கிண்டல் செய்ததால் ஆந்திரமடைந்த நடிகர் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். விழா மேடையிலேயே வில் ஸ்மித், சக நடிகரை அறைந்தது ஹாலிவுட்டில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. இதையடுத்து தனது செயலுக்காக வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் நடிகர் ராக்கை அறைந்ததற்கு முழு பொறுப்பேற்று ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக வில் ஸ்மித் கூறியுள்ளார்.


 

Tags:    

Similar News