இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி மக்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பியோடினார்.

முதலில் மாலத்தீவு சென்று அவருக்கு அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சிங்கப்பூர் தப்பிச் சென்றார். இதனிடையே இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்ந்தது.

மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மாலத்தீவு சென்றாலும் கோத்தாபய பதவியை ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில், அவர் இன்று தனது அதிபர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இலங்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

newstm.in