பாஜக ஐடி பிரிவு தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!!

பாஜக ஐடி பிரிவு தலைவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!!

Update: 2022-04-05 07:43 GMT

பொங்கல் தொகுப்பு குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக மாநில தலைவர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெயரில் அவர் வெளியிட்டது போல பொய்யான ஒரு பதிவை சமூகவலைதளத்தில் பாஜக டி பிரிவு பரப்பியதாக புகார் எழுந்தது

அந்தப் புகார்  தொடர்பாக பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் நிர்மல் குமார் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக அவருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அதில், வழக்கு விசாரணை தொடர்பான விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை வேப்பரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில்  உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஜராக தவறும்பட்சத்தில் கைது நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News