பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!!
பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு!!
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அவர் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும், அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும் இன்று பாஜக நாடாளுமன்ற குழுவிலே பேசி விவாதிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது இவை அனைத்திற்கும் பொருத்தமான திரௌபதி முர்முவை வேட்பாளராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.
64 வயதான இவர், தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார். திரௌபதி முர்மு தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராகத் தொடங்கினார்.
பின்னர் ராய்ரங்பூர் தேசிய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் ஆனார். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டிருந்தார்.
தற்போது பாஜகவும் தனது வேட்பாளரை அறிவித்திருக்கிறது. இதில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு திரௌபதி முர்முவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
newstm.in