பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் வென்ற பாஜக வேட்பாளர்..!!
பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் வென்ற பாஜக வேட்பாளர்..!!
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் பதிவான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் பணகுடி பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் 1,303 ஓட்டுகள் பதிவான நிலையில் அதிமுக வேட்பாளர் லட்சுமி, பாஜக வேட்பாளர் மனுவேல் ஆகியோர் தலா 266 வாக்குகளை பெற்று சமநிலையில் இருந்தனர்.
தேர்தல் ஆணைய விதிகளின் படி இரு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் ஒருவரின் பெயர் தேர்வு செய்யப்படும். அந்த வகையில் வேட்பாளர்களிடம் தெரிவித்துவிட்டு குலுக்கல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்றது. இதையடுத்து பணகுடி பேரூராட்சி 4-வது வார்டில், பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.