உறுதியாகிவிட்டது.. உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் !!

உறுதியாகிவிட்டது.. உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் !!

Update: 2022-06-28 09:02 GMT

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகி விஜயகுமார் சிலர் வந்திருந்தனர். பின்னர் அவர்கள், திமுகவின் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டப்பட்ட செங்கலை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்திற்கு கொண்டு வந்து பயன்படுத்திய நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் திருமண பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த செங்கலை  திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலின்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

உதயநிதி செய்த இந்த செயல் மத்திய அரசின் திட்டத்தை இழிவு படுத்துவது போல் அமைந்துள்ளது. மேலும் அரசு கட்டடம் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த செங்கலை திருடுவது சட்டப்படி குற்றம் என்பதால் அவரை கைது செய்து விசாரணை செய்ய வலியுறுத்தியதாக புகார் அளித்த பிறகு தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின் மீது பாஜகவினர் புகார் மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

 newstm.in
 

Similar News