நடிகர் ஆனார் பாஜக தலைவர் அண்ணாமலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
நடிகர் ஆனார் பாஜக தலைவர் அண்ணாமலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
இரண்டு கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.
‘அரபி’ என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாஸ் நீச்சல் வீரராக நடிக்கிறார். அவருக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அணுகியுள்ளார்.
படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை, ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார்.
‘அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முதல் படத்தின் வெளியீட்டுக்காக பாஜகவினர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.