பாஜக தலைவர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.. திருநங்கை ராஜம்மா புகார்..!
பாஜக தலைவர் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.. திருநங்கை ராஜம்மா புகார்..!
சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் ராஜம்மா. திருநங்கையான இவர், பாஜகவில் திருவிக நகர் கலை இலக்கிய பிரிவு தலைவியாக பொறுப்பு வகித்துள்ளார்.
அத்துடன், கடந்த மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுள்ளார். இந்நிலையில் இவர், வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ராஜம்மா அளித்துள்ள புகாரில், “வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவராக இருப்பவர் கபிலன். அவர், என்னை பாலியல் ரீதியில் அவதூறாக பேசுகிறார். பல இடங்களில் என்னை கட்டாயப்படுத்தி நடனமாட வைக்கிறார்.
கட்சியில் பதவி பெற்று தருவதாக கூறி ஏமாற்றி தனியாக வரச்சொல்லி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். மேலும், ஆட்களை அனுப்பி என்னை மிரட்டுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.