பாஜக பிரமுகர் கட்டாய திருமணம் செய்ய மிரட்டுகிறார்.. கணவனை இழந்த பெண் புகார் !

பாஜக பிரமுகர் கட்டாய திருமணம் செய்ய மிரட்டுகிறார்.. கணவனை இழந்த பெண் புகார் !

Update: 2022-05-27 06:54 GMT

பாஜக பிரமுகர் தன்னை கட்டாய திருமணம் செய்யவேண்டும் என மிரட்டல் விடுத்துவருவதாக கணவரை இழந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.  

திண்டுக்கல் குடை பாறைப்பட்டி பெரியாண்டவர் நகரைச் சேர்ந்த மனிஷா (25) என்பவர் சட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் குமரேசன் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து மனிஷா தனது குழந்தையுடன், தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், தான் குமரேசனின் சகோதரர் எனக்கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். மேலும் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.

மேலும் காவல்நிலையத்தில் மனிஷா குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்து மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மனிஷா வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிக்கிடந்த மனிஷாவை மீட்டு உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது மனிஷா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்துவரும் நபர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனிஷாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in
 

Similar News