15 ரூபாய் சோளம் வாங்க பேரம் பேசிய பாஜக அமைச்சர்!! VIDEO
15 ரூபாய் சோளம் வாங்க பேரம் பேசிய பாஜக அமைச்சர்!! VIDEO
பா.ஜ.க அமைச்சர் சோளம் வியாபாரியிடம் பேரம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே, அண்மையில் தனது காரில் சிவனி என்ற பகுதிக்குச் சென்றார். செல்லும் வழியில் சாலையோர வியாபாரியிடம் காரை நிறுத்தி சோளம் வாங்கச் சென்றார்.
அப்போது அமைச்சர் மூன்று சோளம் தரும்படி வியாபாரியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் மூன்று சோளங்களைக் கொடுத்துவிட்டு ஒன்றுக்கு ரூ.15. ஆக மொத்தம் ரூ.45 கொடுங்கள் என வியாபாரி கேட்டுள்ளார்.
விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் ஒரு சோளத்தின் விலை 15 ரூபாயா என அந்த வியாபாரியிடம் பேரம் பேசியுள்ளார். இதற்கு அந்த வியாபாரி சார்நீங்க காரில் வருவதற்காக நான் விலையை உயர்த்தி ஒன்றும் கொடுக்கவில்லை. இதுதான் விலை என கூறியுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் மன வருத்தத்துடனே பணத்தை கொடுத்து சோளத்தை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பா.ஜ.க அமைச்சருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதில், குறிப்பாக ஏழைகள் விற்கும் சோளத்தை நீங்கள் விலை உயர்ந்ததாகக் காண்கிறீர்கள். ஆனால் சிலிண்டர், பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி போன்றவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை என இணைய வாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
आज सिवनी से मंडला जाते हुए। स्थानीय भुट्टे का स्वाद लिया। हम सभी को अपने स्थानीय किसानों और छोटे दुकानदारों से खाद्य वस्तुओं को ख़रीदना चाहिए। जिससे उनको रोज़गार और हमको मिलावट रहित वस्तुएँ मिलेंगी। @MoRD_GoI @BJP4Mandla @BJP4MP pic.twitter.com/aNsLP2JOdU
— Faggan Singh Kulaste (@fskulaste) July 21, 2022
newstm.in