உ.பி.யில் பாஜக அதிர்ச்சி.. 10 அமைச்சா்கள் தேர்தலில் தோல்வி !!

உ.பி.யில் பாஜக அதிர்ச்சி.. 10 அமைச்சா்கள் தேர்தலில் தோல்வி !!

Update: 2022-03-11 07:18 GMT

உத்தர பிரதேச தோ்தலில் பதவியிலிருந்த 10 அமைச்சா்கள் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது பாஜக மேலிடத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பஞ்சாப் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதோடு ஆட்சி அமைக்கிறது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவின் வெற்றி நாடு முழுவதும் உள்ள அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

அங்கு மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே, உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்றாலும் ஒரு அடியும் கிடைத்துள்ளது. அதாவது, உத்தர பிரதேச தோ்தலில் பதவியிலிருந்த 10 அமைச்சா்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் பாஜக  அதிர்ச்சி அடைந்துள்ளது. பதவியில் இருந்த பத்து அமைச்சர்கள் வெற்றி பெற முடியாதது ஏன் என அக்கட்சி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. 

உத்தர பிரதேச துணை முதல்வரும், பொதுப் பணி, உணவுப் பதப்படுத்துதல் உள்பட பல்வேறு துறைகளின் அமைச்சருமான கேசவ பிரசாத் மெளா்யா, கரும்புத் துறை அமைச்சா் சுரேஷ் ராணா, வருவாய் துறை இணையமைச்சா் சத்ரபால் சிங் கங்வாா், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜேந்திர பிரதாப் சிங், பொதுப் பணித்துறை இணையமைச்சா் சந்திரிகா பிரசாத் உபாத்யாய, ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, விளையாட்டுத் துறை இணையமைச்சா் உபேந்திர திவாரி, ஆரம்பக் கல்வித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துவிவேதி மற்றும் ரண்வீா் சிங், லக்கான் சிங் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.


newstm.in

Tags:    

Similar News