ஹெல்மெட் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினர்!!

ஹெல்மெட் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினர்!!

Update: 2022-02-12 18:04 GMT

கோவையில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி செல்வபுரம் பகுதி 76ஆவது வார்டு பாஜக வேட்பாளராக கார்த்திக் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு பாஜக தொண்டர்களுடன் தெலுங்குபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது சில மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று வேட்பாளர் கார்த்திக் மற்றும் பாஜக தொண்டர்கள் 76ஆவது வார்டில் ஹெல்மெட் அணிந்து, கைகளில் தாமரை பூவுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால் ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

newstm.in

Similar News