பிஎம் கிசான் பணம் ரூ.2,000 வரவில்லையா... அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

பிஎம் கிசான் பணம் ரூ.2,000 வரவில்லையா... அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

Update: 2022-06-09 13:18 GMT

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுதான் இந்தப் பணத்தை பயனாளிகளுக்கு வழங்குகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகளில் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

பிரதமரின் கிசான் நிதியில் இருந்து 11வது தவணையாக ரூ.2,000 மே 31 அன்று வழங்கப்பட்டது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சுமார் 100 மில்லியன் விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் சென்றடைந்தது.

ஆனால், சில விவசாயிகளுக்கு பணம் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது 7 நாட்களாகியும் பிரதமரின் கிசான் நிதியின் 11வது தவணை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணங்களும் அதை எப்படி தீர்ப்பது என்பதும் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியம்.

இவர்கள் பிரதமர் கிசான் உதவி பிரிவிடம் (PM Kisan Helpdesk) ஒரு புகார் தெரிவித்தால் போதும்.திங்கள் முதல் வெள்ளி வரை புகார்களை தெரிவிக்கலாம். இதுமட்டுமல்லாமல் pmkisan-ict@gov.in என்ற முகவரிக்கு குறைகளை அனுப்பலாம். இதுபோக 011-24300606 என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொண்டும் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.

Tags:    

Similar News