#BREAKING: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
#BREAKING: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
தமிழக காவல்துறையில் பணியாற்றும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக ஐஜி டி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி எஸ்.மல்லிகா சென்னையில் நிர்வாக பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎஸ் அதிகாரி சுமித் சரண், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக உள்ள அபின் தினேஷ் மோடக்-குக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஜியாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.