ஓபிஎஸ்ரவீந்திரநாத் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் .பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட .பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் திமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் .பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், .பன்னீர்செல்வத்தின் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எனினும், .பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in