#BREAKING:- 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

#BREAKING:- 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

Update: 2022-02-16 19:26 GMT

பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் பிப்.,18 ம் தேதி தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கும் எனவும், அதே நேரத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தால் அந்த பள்ளிகளுக்கு பிப்.,18-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Similar News