#BREAKING:- போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு..!

#BREAKING:- போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு..!

Update: 2022-05-12 17:14 GMT

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 13 வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னும் 14 வது புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

இந்த புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஊதிய உயர்வு தொடர்பாக சென்னை, குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி நிலைய வளாகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது; “தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. 8 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

முதற்கட்டமாக அரசு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முன் வந்துள்ளது. மேலும் சில கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Similar News