BREAKING:- 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

BREAKING:- 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

Update: 2022-04-07 11:12 GMT

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றியது.

இதை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்களும், இதே 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி அரசு உதவி பெறும் மாணவர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, இன்று (7-ம் தேதி) காலை இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்’ என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

Similar News