#BREAKING:- நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி ..!!

#BREAKING:- நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி ..!!;

Update: 2022-07-08 14:36 GMT


தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த சீயான் விக்ரம் , படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார். ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

இவர் நடித்த பொன்னியின் செல்வன் டீஸர் இன்று மாலை வெளியாக உள்ள  நிலையில் சற்று முன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News