#BREAKING: அனைத்து மொழிகளும் சமமாக.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

#BREAKING: அனைத்து மொழிகளும் சமமாக.. முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்..!

Update: 2022-02-21 10:53 GMT

உலகம் முழுவதும் இன்று (21ம் தேதி) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தை செலுத்துகிறேன்.

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும். அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.


 

Similar News