#BREAKING: குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு..!

#BREAKING: குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு..!

Update: 2022-02-23 14:29 GMT

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில், குரூப்-2 பணிக்கு 116 பணியிடங்களுக்கும், குரூப்-2ஏ பணிக்கு 5412 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வாணையம் சார்பில் கடந்த 18ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், குரூப்-2 பிரிவில் இந்த முறை காவல்துறை பிரிவின் கீழ் சிறப்பு பிரிவு அதிகாரிக்கான பதவி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாததால், இந்த முறை வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 23-02-2022 முதல் 23-03-2022 வரை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான முதல் நிலை தேர்வு மே 21-ம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Similar News