#BREAKING: நீதிபதியை கொல்ல முயற்சி.. உதவியாளர் கைது.. சேலத்தில் பரபரப்பு..!
#BREAKING: நீதிபதியை கொல்ல முயற்சி.. உதவியாளர் கைது.. சேலத்தில் பரபரப்பு..!
சேலம் 4 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். இவருடைய அலுவலக உதவியாளராக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை அவருடைய முன்னாள் உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில், நீதிபதிக்கு நெஞ்சில் சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து, நீதிபதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் பிரகாஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனது இடமாறுதலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன் தான் காரணம் என எண்ணத்தில் இந்த செயலில் பிரகாஷ் ஈடுபட்டதா தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.