#BREAKING: பாஜக வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி.. ஆரணியில் பரபரப்பு..!
#BREAKING: பாஜக வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி.. ஆரணியில் பரபரப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஆரணி நகராட்சியில் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும், தேர்தல் அதிகாரிகள் அதை வேடிக்கை பார்ப்பதாகவும் 27-வது வார்டு பாஜக வேட்பாளர் சண்முகம் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி பாஜக வேட்பாளர் சண்முகம் இன்று ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் சக கட்சியினர் தீக்குளிக்க முயன்ற சண்முகத்தை தடுத்து நிறுத்தினர். ஆரணி நகராட்சி தேர்தலை முறையாக நடத்தக் கோரி பாஜக வேட்பாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.