#BREAKING ப.சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ சோதனை!!

#BREAKING ப.சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ சோதனை!!

Update: 2022-05-17 09:30 GMT

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திற்கு தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரத்தின் மகனான எம்.பி. கார்த்தி சிதம்பரம்  தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும், டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

newstm.in

Similar News