#BREAKING:- கார் டயர் வெடித்து விபத்து.. பெண் சப்-கலெக்டர் பலி..!

#BREAKING:- கார் டயர் வெடித்து விபத்து.. பெண் சப்-கலெக்டர் பலி..!

Update: 2022-04-15 12:37 GMT

கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பெண் சப்-கலெக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனிப் பிரிவு ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்தார். இவர், இன்று காலை சங்கராபுரத்தில் ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து அவருடைய அரசு காரில் அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தனர்.


சங்கராபுரத்தை நெருங்கியபோது, திடீரென காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சார் ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணம் செய்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ராஜாமணியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சப்-கலெக்டர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News