#BREAKING: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘செக்’.. வெளியானது அதிரடி உத்தரவு..!

#BREAKING: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘செக்’.. வெளியானது அதிரடி உத்தரவு..!

Update: 2022-03-01 16:02 GMT

அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு இன்று (1-ம் தேதி) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை பெற தனி தொலைபேசி எண், அலைபேசி எண், வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி, விளம்பரப்படுத்த வேண்டும்.

மற்ற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது, ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் பணி நேரம் குறைவானது. எனவே, ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர்.

இது, ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது. இதனால், வீடுகள் அல்லது சென்டர்களில் டியூஷன் எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

Similar News