# BREAKING: தொடர் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!
# BREAKING: தொடர் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!
தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அங்குள்ள ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அப்பர்பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தினமும் சராசரியாக 5 சென்டி மீட்டர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழையால் மக்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். நகர்பகுதிகளிலும் மழை பெய்வதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.